Sunday, 16 September 2012

iOS சாதனங்களுக்​காக தனது பிரத்தியேக அப்பிளிக்கே​சனை வெளியிடுகி​ன்றது யூடியூப்


இதுவரை காலமும் அனைத்து விதமான iOS சாதனங்களிலும் யூடியூப்பினை இலகுவாக பயன்படுத்தக்கூடியவாறு விசேட அப்பிளிக்கேசனை அப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்துடனேயே வெளியிட்டு வந்தது.
ஆனால் தற்போது அறிமுகமாகும் iOS 6 பதிப்பில் குறித்த யூடியூப் அப்பிளிக்கேசனை தவிர்க்க அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் iOS சாதனங்களின் ஊடாக யூடியூப் தளத்தை பயன்படுத்துபவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக யூடியூப் ஆனாது தனது பயனர்களுக்கென iPad, iPhone போன்ற அனைத்து விதமான iOS சாதனங்களிலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடிய வகையில் பிரத்தியேகமான அப்பிளிக்கேசன் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment