கோலிவுட்டுக்கு வருகிறார் சான்டல்வுட்
கதாநாயகி ஆஷிதா. காதலை மையமாக வைத்து உருவாகும் படம் ‘இசக்கி’. இப்படம்
பற்றி இயக்குனர் எம்.கணேசன் கூறியதாவது: கார் டிரைவர் ஒருவர் பள்ளி
ஆசிரியையை காதலிக்கிறார்.
இது தெரிந்தால் தனது குடும்பத்தினர்
டிரைவரை பழிவாங்குவார்கள் என்று பயப்படுகிறார் ஆசிரியை. இதன் முடிவு எப்படி
அமைகிறது என்பதே கிளைமாக்ஸ். பிரகாஷ்ராஜின் ‘இனிது இனிது’ படத்தில் நடித்த
சரண் ஹீரோ. தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்த ஆஷிதா ஹீரோயின்.
இப்படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார்.
காரைக்குடி அருகில் உள்ள 21 அடி உயர
வீரசாமி சிலை முன் வில்லனை கையில் அரிவாளுடன் துரத்தி செல்லும் காட்சி
இப்படத்துக்காக படமாக்கப்பட்டது. முன்னதாக வீரசாமிக்கு படையல்போடப்பட்டது.
‘புலி உறுமுது புலி உறுமுது’ பாடலை
பாடிய அனந்து, இந்த காட்சிக்காக ‘அய்யா வீரசாமி அந்த அரக்கனை அழிசாமி’
என்று ஆக்ரோஷமாக பாடிய பாடலும் படமானது. ஸ்ரீகாந்த் தேவா இசை. சசிகுமார்
ஒளிப்பதிவு. மெரிட் மீடியா தயாரிப்பு. மதுரை, சென்னை, ஊட்டி, திண்டுக்கல்
ஆகிய பகுதிகளிலும் ஷூட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு இயக்குனர் எம்.கணேசன்
கூறினா
No comments:
Post a Comment