Sunday, 9 September 2012

எல்லோருக்கும் `அது’ பிடித்தது


தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில் ராணியாகத் திகழ்ந்தவர் ஏக்தா கபூர். இவர், `டர்ட்டி பிக்சர்’, `கியா சூப்பர் கூல் ஹே ஹம்’ போன்ற படங்களைத் தயாரித்து சென்சாரின் கத்திரிக்கு உள்ளாகி `சர்ச்சை நாயகி’ ஆகிவிட்டார்.
ஏக்தா கபூருடன் சிறு உரையாடல்..
உங்கள் படங்களில் செக்ஸ் காட்சிகள் நிறைந்திருக்கிறதே, செக்ஸ்தான் வசூலை வாரிக் குவிக்கும் என்று நினைக்கிறீர்களா?
“அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் எனது இரண்டு படங்களுமே செக்ஸ் ரீதியான சுதந்திரத்தை வலியுறுத்துபவை. இரண்டும் வெவ்வேறு வழிகளில் செக்ஸ் சுதந்திரத்தை வலியுறுத்துகின்றன. செக்ஸ் ஒன்றும் நமக்கு வேண்டாத விஷயம் கிடையாது. எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதனால்தான் நாங்கள் அதை திரையில் காட்டுகிறோம். நிஜ வாழ்க்கையில் செக்ஸ் ஜோக்குகளை கேட்டுச் சிரிக்கும் நாம், திரையில் அந்த மாதிரியான கதாபாத்திரங்களைப் பார்த்தும் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்”
இந்தித் திரையுலகில் நீங்கள் ஒரு முக்கியமான தயாரிப்பாளர். அங்கு நிலவும் போட்டி பற்றி உங்கள் கருத்து என்ன?
“போட்டிகள் அருமையானவை, ஆரோக்கியமானவை என்று நான் நினைக்கிறேன். தொழில் என்று வரும்போதுதான் நாங்கள் போட்டியாளர்கள், மற்றபடி நண்பர்கள்தான். ஒருவருக் கொருவர் ஆதரவாக இருக்கிறோம். பரஸ்பரம் அடுத்தவர் படங்களுக்கு உதவுகிறோம். நாங்கள் எதிராளிகளுக்கும் மேலாகக் கூட்டாளிகள். நிச்சயமாக அடுத்தவரின் பணியை மதிக் கிறோம். பாராட்டுகிறோம். நாங்கள் இன்னொரு தயாரிப்பாளரை முந்த நினைப்பதில்லை. மாறாக நம் படத்தை மேலும் மேம்பட்டதாகச் செய்ய வேண்டும் என்று நினைத்து, உழைக்கிறோம். எனவே இங்கு நிலவும் போட்டி நல்ல விஷயம்தான்”
எதைக் குறித்தாவது நீங்கள் பயப்படுகிறீர்களா?
“எனது படம் வெளியாகும் நாளில் நான் ஏறக்குறைய பயந்து முடங்கிப் போகிறேன். நான் இன்னும் சில படங்களை வெளியிட்டுவிட்டால் அந்தப் பயம் தணிந்து போகும் என்று நம்புகிறேன்”
தற்போது நீங்களும் எடையைக் குறைத்து `சிக்’கென்று ஆகியிருக்கிறீர்கள். மீண்டும் நடிகையாகப் போகிறீர்களா?
“இல்லவே இல்லை. நான் ஒரு நடிகையில்லை. காமிராவுக்கு முன்னால் என்னால் நிற்க முடியாது. அப்படி நின்றால் அந்த நொடியே எனக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துடும்”
சினிமாவை இயக்குவீர்களா?
“இப்போதைக்கு அப்படிப்பட்ட திட்டம் எதுவும் என்னிடம் இல்லை..”
திருமணம் எப்போது? அதுகுறித்து வீட்டில் எதுவும் நெருக்கடி கொடுக்கிறார்களா?
“எனது குடும்பத்தினர் அது பற்றி யோசிக்கிறார்களா என்பதே எனக்குத் தெரியாது. நான் பரபரப்பாக இருப்பதால் இதுகுறித்து அவர்களுடன் பேச நேரமில்லை. எனவே என்னுடைய திருமணம் குறித்து என்ன நினைத்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இதற்குப் பதில், திருமணத்திற்கு நேரமில்லை என்பதுதான்”

No comments:

Post a Comment