அம்மாவின் கைபேசி படத்தில் ஐடி ஆபீஸில் வேலை பார்க்கும் பெண்ணாக நடிக்கிறேன். தங்கர்பச்சான் இயக்கி இருக்கிறார். இதுவொரு காதல் கதை அம்சம்கொண்ட படம் மட்டுமல்ல. ஒரு தாயின் உணர்வுகளை பிரதிபலிக்கும் படம். இதில் லிப் டு லிப் காட்சி ஒன்றில் நான் நடித்திருப்பது பற்றி பெரிதுபடுத்தி பேசுகிறார்கள்.
இதுவரை குடும்ப பாங்காக, கிராமத்து பெண்ணாக நான் நடித்திருப்பதால் இப்படி ஊதிப் பெருக்கப்பார்க்கிறார்கள். ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இதுதான். ஏதோ ஒரு காட்சியை வைத்து என்னையோ, முழு படத்தையோ எடை போடாதீர்கள்.
என்னைப் பொறுத்தவரை வழக்கமான கதாபாத்திரத்திலிருந்து மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன். கடந்த ஒரு மாதமாக ‘கண்பேசும் வார்த்தைகள்Õ படத்துக்காக சிங்கப்பூரில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருந்தேன்.
முத்தக்காட்சி பற்றி இப்பட ஷூட்டிங் போவதற்கு முன்பே பேச்சு எழுந்தது. அந்த பேச்சு அடங்கி இருக்கும் என்றுதான் நினைத்தேன்.ஆனால் இன்னும் அதையே பேசுகிறார்கள்.
No comments:
Post a Comment