ஏற்கனவே ராஸ் இரண்டு பாகங்கள் வந்துள்ளன. இது மூன்றாவது பாகம். பிபாசா பாசு முன்னணி நடிகை. பணம், விருது, கௌரவம் எதற்கும் குறைவில்லை. இவரும் இயக்குனர் எம்ரான் ஹஸ்மியும் காதலிக்கிறார்கள். வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இஷா குப்தா இளம் நடிகையாக அறிமுகமாகிறார். அவரின் வருகை பிபாசாவின் திரை வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அத்துடன் எம்ரானும் பிபசாவை புறக்கணித்து இஷா குப்தாவை அரவணைக்க, பிபாசாவின் குணம் மாறத் தொடங்குகிறது. பிளாக் மேஜிக்கின் துணையுடன் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.
ஹாரர் படமான இதனை விக்ரம்பட் இயக்க முகேஷ்பட், மகேஷ்பட் தயாரித்துள்ளனர். பிபாசா இந்தப் படத்தில் இனி காட்டுவதற்கு இல்லை என்ற அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து புறப்பட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment