Monday, 6 August 2012

20 வருடங்களின் பின் மீண்டும் கலக்க வரும் அமலா.


எண்பதுகளில் ஆரம்பித்து, தொன்னூறுகளின் ஆரம்பம் வரை முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை அமலா.
1992-ல் நாகார்ஜூனாவைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கியவர், இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகாலமாக விலங்குகள் வதைக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முல இயக்கும் ‘லைப் இஸ் பியூட்டிபுல்´ என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.
படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமலா கணவர் நாகார்ஜுனா கூறுகையில், “அம்மா வேடத்தில் நடித்தாலும் அமலாவைப் பார்த்தால் அழகான அக்கா மாதிரிதான் தெரிகிறார்,” என்றார்.
தனது மறுபிரவேசம் பற்றி அமலா கூறுகையில், “இத்தனை நாட்களும் எனது மகன் அகிலை வளர்ப்பதிலும் சமூக சேவைகளிலும் பிசியாகி விட்டேன். இப்போது அகில் வளர்ந்து விட்டான்.
அவன் பக்கத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். தொடர்ந்து படங்களில் நடிப்பதா? வேண்டமா? என்று இன்னும் முடிவு செய்யவில்லை.,” என்றார்.

No comments:

Post a Comment