அமெரிக்காவின் லாஸ் வேகாசில் உள்ள பிரபல ஓட்டலில் இளவரசர் ஹாரி இளம்பெண்களுடன், நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
லாஸ்வேகாஸில் விடுமுறையைக் கழிக்கப் போன ஹாரி நிர்வாணமாக இருப்பது போலவும், பிகினி பெண்களுடன் அவர் இருப்பது போலவும் வெளியான படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில்தான் ஹாரிக்கு ஆதரவு தெரிவித்து “Support Prince Harrynwith a naked salute!” என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தைத் திறந்துள்ளனர் இங்கிலாந்து ராணுவத்தினர் சிலர்.
அதில் அனைவரும் ஹாரிக்கு ராயல் சல்யூட் அடித்து நிர்வாணமாக போஸ் கொடுத்து ஆதரவு தெரிவிப்போம் என்ற அழைப்பு இடம்பெற்றது.
இதையடுத்து சுமார் 12,000 பேர் தங்களது நிர்வாண சல்யூட் படத்தை அனுப்பிக் குவித்து விட்டனர்.



















No comments:
Post a Comment